Connect with us

    திருமணம் ஆகி 2 மாதமாகியும் கர்ப்பம் ஆகாததால்; மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட கொடுமை…!!

    Tamil News

    திருமணம் ஆகி 2 மாதமாகியும் கர்ப்பம் ஆகாததால்; மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட கொடுமை…!!

    மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். இவர் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன் அதே வீட்டிலேயே நாகவேல் வசித்து வந்திருக்கிறார்.

    ஆனால் தனிக்குடித்தனம் போக வேண்டும் என சுதா வலியுறுத்தியிருக்கிறார். இதனால் நாகவேல் சுதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு வந்த நாகவேலிடம் மீண்டும் சுதா தனியாகச் செல்வது குறித்த பேச்சை எடுத்திருக்கிறார்.

    அப்போது தம்பதியருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் நாகவேல் சுதாவின் கழுத்தை நெரித்திருக்கிறார்.

    இதனால் அந்த இடத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுதா உயிரிழந்திருக்கிறார்.

    இதனையடுத்து எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் நடந்ததைக் கூறி நாகவேல் சரணடைந்திருக்கிறார்.

    அப்போது போலீஸிடம் திருமணத்துக்கு பிறகு தான் என்னைவிட சுதாவுக்கு வயது அதிகம் என தெரியவந்தது.

    இதற்கிடையே திருமணமான நாளில் இருந்து சுதா தனிக்குடித்தனம் வருமாறு என்னை அடிக்கடி நச்சரித்து வந்தார்.

    ஆனால் நான் மறுத்து விட்டேன். இந்தநிலையில் சுதா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்தார்.

    இது எனக்கு தெரிய வந்தது. எனவே நான் அவரை கண்டித்தேன். இருந்த போதிலும் அவர் என் பேச்சை கேட்கவில்லை.

    இந்தநிலையில் சுதா என்னை தனிகுடித்தனம் வரும்படி தொடர்ந்து தொல்லை தந்தார்.

    இதனால் அவரது நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. நேற்று இரவு வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பினேன்.

    இதேபோலவே நேற்றும் பிரச்னை நடந்தது.

    எனவே தான் ஆத்திரத்தில் சுதாவின் கழுத்தை நெரித்தேன். ஆனால் அவர் இறக்கும் அளவுக்கு ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்.

    நாகவேலின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரை மாநகர தெற்கு துணை கமிஷ்னர், திடீர் நகர் உதவி கமிஷ்னர் இருவரும் சுதாவின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதற்கிடையே திருமணமாகி இரண்டு மாதமாகியும் சுதா கர்ப்பமாகாததாலும், தன்னைவிட வயது அதிகம் கொண்டதாலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் இவ்வாறு நடந்திருக்கும் என சந்தேகம் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!