Tamil News
சித்தி மகனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி; ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்; விக்கித்து நின்ற மனைவி..!!
சித்தி மகனுடன் மனைவி கள்ளக்காதல் வைத்திருந்த நிலையில், தட்டிக்கேட்க சென்ற கணவனின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல், பெருமான்குழி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரின் மனைவி அர்ச்சனா. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
அர்ச்சனாவுக்கு கணவருடைய சித்தி மகன் செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் ராஜேஷ் வீட்டில் இல்லாத சமயத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
நேற்றும் கள்ளக்காதல் ஜோடி அர்ச்சனாவின் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளது.
இந்த விஷயம் ராஜேஷுக்கு தெரியவரவே, அவர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர், கள்ளக்காதலன் செந்திலின் வீட்டிற்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினார்.
இதனை அறிந்து ராஜேஷ் வீட்டிற்கு ஆவேசத்துடன் வந்த செந்தில் ராஜேஷை தாக்கினார்.
இதனைக் கண்டு ராஜேஷின் தம்பி செந்திலை சரமாரியாக அடித்து உதைத்தார்.
இதனைக்கண்டு பயந்து ஓடிய செந்தில் அருகில் இருந்து கட்டை மற்றும் செங்கல்லை எடுத்து ராஜேஷையும் ரவிக்குமாரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் ராஜேஷுக்கும் ரவிக்குமாருக்கும் மண்டை உடைந்து இரத்தம் கொட்டி உள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வர செந்தில் மற்றும் தினேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்
படுகாயமடடைந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
