Connect with us

    கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த பரிதாபம் 😭😭👇👇

    Usha

    Tamil News

    கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த பரிதாபம் 😭😭👇👇

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வட்டாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன்(வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

    இவருக்கு உஷா எனும் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    Usha

    கருத்து வேறுபாடு முத்துராமலிங்க ராஜன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    கடந்த 9-ம் தேதி காலை பூலாங்குளம் காட்டுப்பகுதியில் முத்துராமலிங்கராஜன் கை, கால்கள் முறிக்கப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

    மனைவி உஷாவிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறியிருந்தார்.

    இதனால் மற்றவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் வெற்வேறு நபர்களிடம் விசாரணை செய்ததில் சந்தேகம் எழாத நிலையில், உஷாவிடம் மட்டும் தொடர்ந்து மழுப்பல் பதில்களே கிடைத்தன.

    இதனையடுத்து உஷாவிடம் கிடுக்குபிடி விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர். விசாரணையில் உஷா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

    அதாவது, உஷாவின் கணவன் வேலை பார்த்து வந்த கடையின் முதலாளியான கடல்மணி என்பவருக்கும் உஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

    இவ்வாறு இருக்கையில் இதற்கு இடையூறாக உள்ள முத்துராமலிங்க ராஜனை என்ன செய்வது என்று யோசித்துள்ளனர்.

    இதனையடுத்து ராஜனை கொலை செய்வதென இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

    அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆள் அரவமற்ற காட்டுக்குள் ராஜனை பேச்சுவாக்கில் அழைத்து சென்றுள்ளார் கடல்மணி. பின்னர் அங்கேயே அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.

    உஷா திட்டம் தீட்ட கடல்மணி கொலை செய்ய ராஜன் உயிரிழந்துள்ளார்.

    இதனையடுத்து இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரிய வரவே உஷாவை காவல்துறை கைதுசெய்தது.

    ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த கடல்மணியை தூத்துக்குடியில் இன்று காவல்துறை கைது செய்துள்ளது.

    அவர்களை ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!