Connect with us

    பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததற்காக சண்டையிட்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்..!

    Avinash

    Viral News

    பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததற்காக சண்டையிட்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்..!

    பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்து உள்ளார்.

    Avinash

    கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ் இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது.

    பெங்களூருவில் வேலை பார்த்து கொண்டிருந்த அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரும் அவினாஷ், அவ்வப்போது குழந்தையை ஆசையாய் தூக்கி கொஞ்சுவது வழக்கம்.

    இன்றும் அதுபோல் காலை எழுந்ததும் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார்.

    இதை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது என சத்தம் போட்டுள்ளார்.

    இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதில் கோபம் அடைந்த அவினாஷ் மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் பலத்த படுகாயம் அடைந்த தீபிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!