Connect with us

    “அடப்பாவமே! கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆச்சு; அதுக்குள்ள இப்படி நடக்கணுமா..?” – இளம்பெண் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகம்…!!

    Vijayaraj Menaka

    Tamil News

    “அடப்பாவமே! கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆச்சு; அதுக்குள்ள இப்படி நடக்கணுமா..?” – இளம்பெண் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகம்…!!

    திருமணமான மூன்றே மாதத்தில், கணவனின் சந்தேகத்தால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Vijayaraj Menaka

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நேரு மகன் விஜயராஜ்(வயது 30). கார் டிரைவர்.

    இவருக்கும் ஜம்படை கிராமத்தை சேர்ந்த தணிகைமலை மகள் மேனகா(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டு மாடியில் மேனகா செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது விஜயராஜ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    நீண்ட நேரமாகியும் செல்போனை வைக்காமல் மேனகா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

    இதனால் விஜயராஜ் கடும் கோபம் கொண்டுள்ளார்.

    கோபத்தில் தனது மனைவியிடம் சத்தம்போட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த விஜயராஜ் தனது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு, அருகில் கிடந்த பிளாஸ்டிக் பைப்பால் மேனகாவை சரமாரியாக தாக்கினார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த மணலூர்பேட்டை காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயராஜை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயராஜ்க்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது.

    இவருடைய தொல்லை தாங்க முடியாமல், அவர்கள் இருவரும் பிரிந்து சென்று விட்டனர்.

    இந்நிலையில், மேனகாவை மூன்றாவதாக திருமணம் செய்தார் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜயராஜிக்கு ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் மனைவி திருமணம் நடைபெற்றது.

    அவர் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

    அந்தப் பெண்ணை அடிக்கடி குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அந்தப் பெண் இவருடைய வாழாமல் பிரிந்து சென்றார்.

    அதன் பிறகு மூன்றாவது மனைவி மேகனா என்ற பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.

    மேனகா மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு தொலைபேசியில் நீ யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டிருந்தார்.

    அதன் பிறகு குடிபோதையில் அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்தார் மனைவி உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!