Connect with us

    ஒரே இளைஞரை திருமணம் செய்த அக்கா தங்கை; இரவில் நடந்த மோசமான சம்பவம்; கதறிய தங்கை..!

    Dhanabal ambika

    Tamil News

    ஒரே இளைஞரை திருமணம் செய்த அக்கா தங்கை; இரவில் நடந்த மோசமான சம்பவம்; கதறிய தங்கை..!

    கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34).

    Dhanabal ambika

    தனபால்- அம்பிகா

    இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30).

    அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    அம்பிகா திருமணத்திற்கு பிறகும் தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தனபால் 2 வது மனைவி அம்பிகாவை மட்டும் அழைத்து கொண்டு இரவு நேரத்தில் தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்திற்கு மண் எடுக்கச் சென்று வருவது வழக்கம்.

    அந்த வகையில் கடந்த 29-ம் தேதி தனது இரண்டாவது மனைவி அம்பிகாவுடன் மண் அள்ள சென்றுள்ளார்.

    ஏற்கனவே அம்பிகாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தனபால் இது குறித்து அம்பிகாவிடம் கேட்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, ஆத்திரத்தால் அவரை சாட்டை குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார்.

    அங்கிருந்து இரண்டு நாட்கள் தலைமறைவான அவர் நேற்று வெள்ளியணை போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் விவசாய கிணற்றிலிருந்து அம்பிகா உடலை, வெள்ளியணை போலீசார் மீட்டு, கணவர் தனபாலை கொலை வழக்கில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    இந்த சம்பவம், வெள்ளியணை
    பகுதியில், பெரும் பரபரப்பை
    ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!