Viral News
கணவன் மனைவி இருவரும் வீட்டில் ஒன்றாக மது அருந்தி கும்மாளம்; இறுதியில் நடந்த விபரீதம்..!
கணவனும் மனைவியும் வீட்டில் மது அருந்திவிட்டு, கும்மாளம் அடித்த நிலையில், கணவனுக்கு சாப்பாடு வைக்காததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
புதுடெல்லி சுல்தான்பூரை சேர்ந்த நபர் வினோத் குமார் துபே (வயது 47). இவரது மனைவி சோனாலி (39 வயது). இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு திருமணமானது.
இதனிடையே, வினோத்திற்கும் அவரது மனைவி சோனாலிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் – மனைவி இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, தனக்கு உணவு பரிமாறிமாறு சோனாலியிடம் வினோத் கேட்டுள்ளார்.
சரக்கடித்து விட்டு தன்னிலை மறந்த நிலையில் இருந்த சோனாலி கணவருக்கு உணவு பரிமாற மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த வினோத் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் வினோத் தனது மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் இரவு முழுவதும் உயிரிழந்த தனது மனைவி அருகேயே உறங்கியுள்ளார்.
பின்னர், காலை போதை தெளிந்ததும் எழுந்த வினோத் தனது மனைவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போதையில் சோனாலியை கொலை செய்ததை உணர்ந்த வினோத் வீட்டில் இருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இந்த சம்பம் குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
