Viral News
அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து விட்டு, நண்பனின் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர்; இறுதியில் நடந்த விபரீதம்…!
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் சிரா தாலுகா காலசிவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மீனாட்சி.
ராஜுவுக்கு அளவுக்கு, அதிகமாக குடிப்பழக்கம் பழக்கம் இருந்தது.
இதனால், தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, மீனாட்சிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தங்களது உல்லாச வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருக்கிறாரே என்று எண்ணிய மனைவி தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார்.
இதனால் தடையாக இருந்த தனது கணவரை போட்டு தள்ள இருவரும் திட்டமிட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள ராஜு தோட்டத்தில் வைத்து ராஜுவும், ராஜேசும் மது அருந்தி உள்ளனர்.
பின்னர் குடிபோதையில் படுத்திருந்த ராஜு தலையில் ராஜேஷ் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி ராஜேஸ் தீவைத்தார்.
தோட்டத்தில் தீப்பிடித்து எரிவதை பார்த்து கிராம மக்கள் ஓடி வந்தனர். பின்னர் ராஜு உடலில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மனைவியிடம் விசாரணை நடத்தியது போது முன்னுக்கு பின் முரணாக வகையில் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து, அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர், மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
