Connect with us

  “நைட்டி போடு” மனைவியை வற்புறுத்திய கணவர்; விடிகாலையில் மனைவியை காணோம்.. நடந்த விபரீதம் 😲😲👇👇

  Wife

  Tamil News

  “நைட்டி போடு” மனைவியை வற்புறுத்திய கணவர்; விடிகாலையில் மனைவியை காணோம்.. நடந்த விபரீதம் 😲😲👇👇

  சென்னை வியாசர்பாடி காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜீவா. 45 வயதாகிறது. இவர் ஒரு பிளம்பர். இவரது மனைவி பெயர் சரிதா. இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  Wife

  இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கொருக்குப்பேட்டையிலேயே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சரிதா வேலை செய்து வந்தார்.. ஆனால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி, அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார் ஜீவா.

  நேற்று முன்தினம் இரவு தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்த ஜீவா, இரும்பு கம்பியால் சரிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சரிதா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

  சடலத்தை பார்த்ததுமே பதறிப்போன ஜீவா, சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். அதனால், கட்டிலுக்கு அடியில் இருந்த பாயை எடுத்து சரிதாவின் உடலை அதில் வைத்து சுருட்டி, கட்டிலுக்கு அடியிலேயே மறைத்து வைத்துவிட்டார்.

  இரவெல்லாம் அங்கேயே உட்கார்ந்துள்ளார். மறுநாள் காலை எழுந்து, வேலைக்கு செல்லாமல், அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.

  அப்போது சரிதாவுடன் வேலை செய்யும் அவரது சொந்தக்கார பெண் நந்தினி என்பவர், ஜீவாவுக்கு போன் செய்து, அக்கா ஏன் இன்னும் வேலைக்கு வரவில்லை என்று கேட்டிருக்கிறார்.

  அதற்கு ஜீவா, காலையிலேயே கிளம்பி சரிதா வேலைக்கு வந்துவிட்டாரே எனுறு சொல்லி உள்ளார்.

  இதனால் சந்தேகமடைந்த நந்தினி தன்னுடன் இன்னொரு தோழியை அழைத்துக் கொண்டு, ஜீவாவின் வீட்டிற்கே கிளம்பி வந்துள்ளார்.

  அப்போது வீட்டிற்குள் யாருமே இல்லை.. ஆனால், கட்டிலுக்கு அடியிலிருந்து ரத்தம் மட்டும் வழிந்து வந்துள்ளது.

  இதை பார்த்து பதறிப்போன நந்தினி, அலறியடித்து கொண்டே வெளியே ஓடிவந்தார்.. அக்கம்பக்கத்தினருக்கு தகவலை சொல்லி அழைத்துள்ளார்..

  அக்கம் பக்கத்தினரும் இதை சென்று பார்த்து அதிர்ந்துபோய், வியாசர்பாடி போலீசாருக்கு விஷயத்தை சொன்னார்கள்.

  போலீசாரும் ஜீவா வீட்டிற்கு சென்று, கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சரிதாவின் சடலம் பாயில் சுருட்டப்பட்டு கிடந்தது.. இதையடுத்து, உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் உடனடியாக ஜீவாவையும் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் நடத்தையில் சந்தேகப்பட்டு சரிதாவை கொன்றதை ஜீவா ஒப்புக்கொண்டார்.

  இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ஜீவாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

  குழந்தை இல்லை என்பதால், சரிதா தன்னுடைய அண்ணன் குழந்தைகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.. ஜீவாவுக்கு சரிதா மீது கொள்ளை பிரியமாம்.. அதனால்தான், சரிதா யாரிடம் சகஜமாக பேசினாலும் பிடிக்காதாம்.

  அவரது நடத்தையில் சந்தேகப்படவும் இது காரணமாக அமைந்துவிட்டது.. இதுவே தகராறாகவும் உருவெடுத்து வந்துள்ளது..

  கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில், அக்கம் பக்கத்தினர் மற்றும் சரிதாவின் உறவினர்களிடமெல்லாம், “சரிதாவை காணோமே? எங்கு போனாள் தெரியலையே?” என்று அழுது ஒப்பாரி வைத்து நாடகமாகியிருக்கிறார் ஜீவா.

  இதனால் அதி்ர்ச்சி அடைந்த உறவினர்களும், வீட்டை தவிர மற்ற இடங்களில் எல்லாம் சரிதாவை தேடினர்.

  அதற்கு பிறகுதான் போலீசார் உள்ளே வந்து, பார்த்தபோது, நிர்வாண நிலையில் சரிதாவின் உடல் பாயில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

  முதலில் கட்டிலுக்கு அடியில் பிணத்தை வைத்த ஜீவா, பிறகு, குளியல் அறையில் கொண்டுபோய் பாயுடன் சுருட்டி சடலத்தை போட்டுள்ளார்..

  கைதான பிறகு, போலீசாரிடம் ஜீவா வாக்குமூலத்தில் சொல்லும்போது, “சம்பவத்தன்று, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரிதாவிடம், ஏன் நீ நேரம் கழித்து வருகிறாய்? என்று கேட்டேன்.

  இதனால் எங்கள் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டது. பிறகு, சரிதாவை தாம்பத்ய உறவுக்கு வரும்படி அழைத்தேன். இதற்காக ஆடைகளை கழட்டிவிட்டு நைட்டி போட்டுக்கொள்ளுமாறு சொன்னேன்..

  அதற்கு சரிதா மறுத்ததால், நானே அவரது ஆடைகளை கழட்டிவிட்டு அரை நிர்வாணப்படுத்தியதால் எங்களுக்குள் தகராறு முற்றியது.

  இதில் ஆத்திரம் அடைந்த நான், சரிதாவை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றேன். பிறகுதான் சரிதாவின் சடலத்தை பாயில் சுருட்டி, மறைத்து வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

  உடனே போலீசார், “மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டாயே? அந்த நபர் யார்?” என்று கேட்டார்கள்.. ஆனால், அதை சொல்ல ஜீவா மறுத்துவிட்டாராம்.

  “இறந்து போன என் மனைவி நல்லவளாகவே இருக்கட்டும்” என்று மட்டும் போலீசில் சொன்னாராம்..!!!

   

  Continue Reading
  To Top
  error: Content is protected !!