Viral News
அடிக்கடி சண்டை போட்டதால், மனைவியை ரூ.1.50 லட்சத்திற்கு விற்ற கணவர்..!!
ஒரிசாவைச் சேர்ந்த பெண்ணை சண்டை போட்ட காரணத்திற்காக ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது.
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை செய்தனர்.
கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.
அடிக்கடி இவர் கணவருடன் சண்டைபோட்டு வந்துள்ளார்.
இதனால் அவரது கணவர் ரூ.1.5 லட்சத்திற்கு மனைவியை மனோஜ் பிரஜாபதிக்கு விற்றுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்ய ராஜஸ்தான் கடத்த முயற்சி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் மனோஜ் பிரஜாபதியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மனோஜ் பிரஜாபதி கூறுகையில்,
நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே ரூபாய் 1.5 லட்சம் கொடுத்தேன்.
அவள் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது எனக்குத் தெரியாது” என்று மனோஜ் பிரஜாபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜார்சுகுடாவைச் சேர்ந்த ஹ்ருசிகேஷ் சேத்தி, கிரண் சேத்தி மற்றும் டானிஷி ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அடுத்ததாக் கணவனையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
