Viral News
மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்த கணவர்; 4 ஆண்டுகளுக்கு பின் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை..!
மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்துள்ளார் கணவர் ஒருவர்.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உண்மை அவரது மனைவிக்கு தெரிய வந்ததால் மிகவும் வேதனைப்பட்ட அவரது மனைவி, கணவர் மீது போலீசில் புகார் அளித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் உள்ள கோட மேட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து வந்து அகதியாக இருப்பவர் ஆவார்.
ரஞ்சிதாவுக்கும் பிரசாத்துக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது,
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசாந்த் குடிக்கு அடிமையானவர்.
அதனால் அவருக்கு குடும்பத்தின் மீதோ மனைவி மக்கள் மீதோ, ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியின் சிறுநீரகத்தை விற்று அதில் உல்லாச வாழ்க்கை வாழலாம் என பிரசாந்த் முடிவு செய்தார்.
எனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றுவதாக கூறி, மனைவியை நம்ப வைத்து, புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரசாந்த் அழைத்துச் சென்றார்.
அப்போது மனைவி கணவர் தனது உடல்நிலை மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே என பாசத்தில் மகிழ்ந்தார்.
ஆனால் பிரசாந்த் மருத்துவர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, மனைவியின் சிறுநீரகத்தை காசுக்காக விற்பனை செய்து விட்டார்.
ரஞ்சிதாவிற்கு தெரியாமலேயே அவரது சிறுநீரகம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது,
அதன் பின்னர் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே சிறுநீரகத்துடன் ரஞ்சிதா தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில்தான் திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றார், அப்போதுதான் அவருக்கு உண்மையான விஷயம் தெரியவந்தது,
தனக்கு ஒரே ஒரு சிறுநீரகம் தான் உள்ளது என மருத்துவர்கள் கூறியதை கேட்டு ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார்.
தான் கணவனால் ஏமாற்றப் பட்டதை எண்ணி கதறி அழுதார்.
இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி மல்கான் கிரி காவல் நிலையத்தில் தனது ஏமாற்றுக்கார கணவன் மீது மோசடி புகார் கொடுத்தார்.
சிறுநீரகத்தை விற்ற கையோடு கணவர் பிரசாத் ஆந்திராவுக்கு சென்று அங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பின்னர் பெங்களூர் சென்று அங்கு வசித்து வருவதாக ரஞ்சிதா புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூர் அனுப்பினர்.
இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.
தற்போது ரஞ்சிதா ஒற்றைச் சிறுநீரகத்துடன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
