Viral News
“என்னோட மனைவி எனக்கு பெண் குழந்தை மாதிரி” – நெஞ்சை உருக்கும் ஓர் சோகம்..!!
நெப்போலியன் என்ற நபர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் மதூரா ரெட்டி கண்டிகையில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டு, இவர் மஞ்சுளா என்ற பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணத்திற்கு பெற்றோரின் ஆதரவு இல்லை.
இந்நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு இந்த காதல் ஜோடிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால் துரதஷ்டமாக, மகப்பேறுக்கு பிறகு மஞ்சுளாவுக்கு கழுத்துக்கு கீழுள்ள உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளது.
பிரசவத்தின் போது அளிக்கப்பட்ட தவ.றான சிகிச்சையால், இதுபோன்று கை, கால்கள் செ.ய.லிழந்ததாக சொல்லப்படும் நிலையில், ஆசை, ஆசையாய் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கூட கொடுக்கமுடியாத நிலையில் மஞ்சுளா இருந்ததாக கண்ணீருடன் கூறுகிறார் கணவர் நெப்போலியன்.
அப்போது இருந்து தனது மனைவியை சொந்த பெண் கு.ழ.ந்தையாக பாவித்துக் கொண்ட நெப்போலியன், மனைவியை தூக்கிக் கொண்டு அலையாத இடமில்லை, செல்லாத மருத்துவமனை இல்லை.
ஆனால் இறுதியில், வேறு வழியில்லாமல் வீட்டிலேயே வைத்து மருந்து, மாத்திரைகள் வழங்கி பராமரித்து வருகிறார்.
இயற்கை உபாதைகள் கூட படுக்கையிலேயே க.ழிக்கும் பரிதாப நிலையில் மஞ்சுளா தற்போது உள்ளார்.
இதனால் நவீன வசதியுடன் கூடிய மோட்டார் பொருந்திய வீல் சேர் வழங்கவேண்டும் என அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார் மஞ்சுளா.
ஏற்கனவே இத்தனை பிரச்சனையில் இருக்கும் இந்த குடும்பத்தின் மீது 2 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு பே.ரி.டி.யும் விழுந்தது.
நெப்போலியனுக்கு இ.ரு.த.யத்தில் பா.திப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால் பணம் இல்லாததால் இன்னும் சிகிச்சை செய்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.
மனைவியை கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டிய சூழலில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் ஏதேனும் சுய தொழிலை அரசு அமைத்து கொடுத்தால் குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருக்கும் எனவும் நெப்போலியன் வ.லி.யு.றுத்.தியுள்ளார்.
தற்போது, அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இவர்களது மகன் முத்துபோலன், பிறந்ததில் இருந்தே தன்னுடைய அம்மா தன்னை தொட்டுத் தூக்கியது கூட இல்லை என ஏக்கத்துடன் கூறுவது கண்கலங்கச் செய்கிறது.
தன்னார்வலர் வழங்கிய வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதோடு, மஞ்சுளாவுக்கு நவீன வீல் சேர் வழங்கி, நெப்போலியனின் இ.ருதய அ.று.வை சி.கி.ச்சை.க்கு உதவி, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் முத்துபோலனின் மேற்படிப்புக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
வரதட்சணை கொட்டிக் கொடுத்தாலும் சின்ன சின்ன காரணத்திற்காக மனைவியை விட்டு பிரியும் இந்த காலத்தில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது காதல் மனைவியை 15 ஆண்டுகளாக குழந்தையாக கவனித்து வரும் கணவன் சமுதாயத்தில் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பதே உண்மை.
