Connect with us

    அண்ணி மீது தீரா காதல் கொண்டு கொழுந்தன் செய்த விபரீத செயலால் கலங்கி நிற்கும் குடும்பம்..!

    illegal affair

    Tamil News

    அண்ணி மீது தீரா காதல் கொண்டு கொழுந்தன் செய்த விபரீத செயலால் கலங்கி நிற்கும் குடும்பம்..!

    திருமணத்தை மீறிய தவறான உறவால் அண்ணியும், கொழுந்தனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    illegal affair

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராம குளத்தின் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று முன்தினம் காலை ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் மதுரை, திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தை சேர்ந்த அருள்ஜோதி (23) மற்றும் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (35) என்பது தெரியவந்தது.

    இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் கடந்த 4-ம் தேதி இவர்கள் இருவரும் காணாமல் போனார்கள் என்றும் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும், தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரியப்பா மகன் என்பதும் தெரிய வந்தது. அருள்ஜோதி அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

    அவ்வாறு சென்று வந்ததால் அருள்ஜோதிக்கும், முத்துலட்சுமிக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இத்தகவல் தெரிந்த இரு குடும்பத்தினரும் இருவரையும் கண்டித்தனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு , காணாமல் போன இருவரும் மர்மமான முறையில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் தாண்டிய முறையற்ற உறவால் இருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!