Tamil News
எங்களை நிம்மதியா, சந்தோஷமா இருக்க விட மாட்டீங்களா?” – கள்ளக்காதல் ஜோடி செய்த விபரீத செயல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பாரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – ராமலட்சுமி (32), தம்பதியர்.
இவர்களுக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். பிள்ளைகள் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மேலப்பாளையபுரத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருக்கு வயது 41.
பன்னீர்செல்வத்துக்கு திருமணமாகி 20 ஆண்டாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் பன்னீர் செல்வத்திற்கும் ராமலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டது.
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களது கள்ளத்தொடர்பு இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததையடுத்து, இரண்டு குடுபத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இருவரும் பத்தாண்டுகளுக்கு முன் 13 நாட்கள் தலைமறைவாயினர்.
பின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி அவரவர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதனால் ராமலட்சுமியின் கணவர் மணிகண்டன் அவரை விளாம்பட்டிக்கு அழைத்து சென்றார்.
ஆனால் எம்.துரைச்சாமிபுரம் அருகே மணிகண்டனின் சகோதரர் வீடு கட்டி வந்த நிலையில், தம்பியை பார்ப்பது போல அங்கும் அவரின் காதலன் அவரை தேடி வந்தார்.
இதனால் ராமலட்சுமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.
அதனால் அவர்களின் இந்த உறவுக்கு எதிர்ப்பு நிலவியதால் மார்ச் 11 முதல் இருவரும் மாயமாயினர்.
இதன் பிறகு இரு குடும்பத்தினரும் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் ஒரு தனியார் பிளாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு கிடந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரனேரி போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
