Tamil News
உல்லாசத்திற்கு வரமறுத்த பெண்; கோபத்தில் கள்ளக்காதலன் செய்த பகீர் செயல்..!!
உல்லாசமாக இருக்கலாம் வா என கள்ளக்காதலன் அழைத்த நிலையில் வர மறுத்ததால், அப்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது தனது பெயர் ராஜா(38), என்றும் தனது கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
உடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் அரை நிர்வாண நிலையில் கண்ணம்மாள்(50), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட கண்ணம்மா குன்றத்தூர் அடுத்த ஜெகநாதபுரம், சேக்கிழார் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு ஹாலோ பிளாக் கல் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
ராஜாவுக்கும் கண்ணம்மாவுக்கும் கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் நேற்றிரவு போதையில் வந்த ராஜா கண்ணம்மாவிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது அவரது மகள்கள் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு மீண்டும் வந்த ராஜா கண்ணம்மாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.
மேலும் உடைகள் எல்லாம் கிழிந்து அரை நிர்வாண நிலையில் இருந்ததால் போதையில் உடலுறவு கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா?
அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
