Tamil News
“நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டேன்; இப்ப என் பொண்டாட்டிய அபகரிச்சுட்டான்” – கதறி அழுத இளைஞர்…!
என்னதான் நட்பாக இருந்தாலும் இந்த காலத்துல யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதிச்சா என்னாகும் என்பதற்கு உதாரணம் தான் இந்த செய்தி தொகுப்பு.

சபரி நாதன்- கோபிகா
மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார்.
இவருக்கும் மதுரையைச் சேர்ந்த கோபிகாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே, தொழில் நிமித்தமாக மனைவி கோபிகாவுடன் வெளியூரில் வசித்து வந்த மனோஜ் குமார், கடந்த 2 மாதங்களாக செங்கப்படை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனோஜ் குமாரின் நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த
சபரிநாதன் (27) என்பவர் மனோஜின் வீட்டுக்கு அடிக்கடி சென்று உதவி செய்து வந்துள்ளார்
கோபிகாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த சபரிநாதன், மனோஜ் குமார் இல்லாதபோதும் அடிக்கடி வீட்டிற்கு வந்து கோபிகாவை பார்த்து சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கோபிகா, சபரிநாதன் ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
கோபிகாவும் கணவர் மனோஜ் குமாருக்கு தெரியாமல் சபரிநாதனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 24ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்த தாயுடன், கோபிகா செங்கப்படை கிராமத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், கோபிகா சொன்னபடி தாயுடன், வீட்டுக்கு செல்லாமல் மாயமானதால், தனது மனைவியை காணவில்லை என கமுதி காவல் நிலையத்தில் கணவர் மனோஜ்குமார் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், தாயுடன் பேருந்தில் சென்ற கோபிகாவை பைக்கில் விரட்டிச்சென்ற சபரிநாதன், தன்னுடன் வாழவருமாறு கோபிகாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றது வீடியோ ஆதாரத்தால் அம்பலமானது.
ஓடும் பேருந்தில் அமர்ந்த படி கோபிகா கதறி அழ, பேருந்தை தனது பைக்கில் விரட்டிச் சென்று, கோபிகாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் சபரிநாதன்.
கோபிகாவின் அருகில் இருந்த அவரது தாயார் வீட்டிற்கு பெரியவர்களுடன் வந்து பேசும்படி சபரி நாதனிடம் கூறி உள்ளார்.
இந்த நிகழ்வை பேருந்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதனை வைத்து மனோஜ்குமார் மாமியாரிடம் விசாரித்த போது, மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் வைத்து காதலி கோபிகாவை, சபரி நாதன் பைக்கில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் மனோஜ்குமார் மீண்டும் புகார் அளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சபரிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மனோஜ்குமார்
மற்றும் அவரது உறவினர்களை தாக்கி
கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பன் என்று நம்பி வீட்டிற்குள் விட்டதற்கு தனது மனைவியையே காதலித்து கடத்திச் சென்ற சம்பவம் செங்கப்படை கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
