Connect with us

    கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்… 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண் : அதிர்ந்து போன கணவன்!!

    illegal love pair

    Uncategorized

    கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்… 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண் : அதிர்ந்து போன கணவன்!!

    தாலி கட்டிய கணவனையும், கைக்குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு, சின்னப்பையனுடன் ஓடிய இளம்பெண்ணின் வாழ்வு துயரத்தில் முடிந்துள்ளது.

    illegal love pair

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஒரு கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பெயர் சங்கீதா. வயது.20.

    இவர்களுக்கு திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகிறது.

    இந்த தம்பதிக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி 2 பேருமே திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

    அதேபோல், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவரும் இங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வயது.20.

    சங்கீதாவின் கணவரும், சின்னபையனும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

    அதனால், சின்னபையன் அடிக்கடி இவர்களின் வீட்டிற்கும் வந்துள்ளார். அப்போது, சங்கீதாவிடம் நெருங்கி பழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 30- ந்தேதி, சின்ன பையன், தனது கள்ளக்காதலி சங்கீதாவை அழைத்து கொண்டு மாயமானார்.

    இதனால் மனைவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து ஊரை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே நேற்று காலை சின்ன பையன், கள்ளக்காதலி சங்கீதா இருவரும் பென்னாகரம் போலீசில் இன்று காலை சரண் அடைவதற்காக சென்றனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் நுழையும் போது சின்னப்பையன் மற்றும் சங்கீதா இருவரும் வாந்தி எடுத்து மயங்கி விழும் நிலையில் இருந்துள்ளனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

    இதில் இருவரும் விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தது தெரிய வந்தது.

    உடனே போலீசார் இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சின்னபையன், சங்கீதா இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெண்ணாகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!