World News
கணவரின் ஸ்கூட்டிக்கு தினமும் பெட்ரோல் போட சென்ற பெண்; பெட்ரோல் பங்க் ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் ஸ்கூட்டியுடன் ஊரை விட்டு ஓடிய கொடுமை..!
கணவனின் மோட்டார் சைக்கிளுக்கு (ஸ்கூட்டி), ஒவ்வொரு நாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, பெட்ரோல் பங்க் சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில நாட்களிலேயே ஓட்டமெடுத்துவிட்டார்.
இந்த சம்பவம் இலங்கையின் தென் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
புது மண தம்பதியான அவ்விருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கணவன் வேலைக்குச் சென்றவுடன் வீட்டு வேலைகளை மனைவி கவனித்து வந்துள்ளார்.
இருவரும் திருமணத்திற்கு முன்னர் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் ஸ்கூட்டியில் பயணிக்கும் போது, ஸ்கூட்டியை அப்பெண்ணே ஓட்டிச் செல்வார். கணவன் பின்னால் அமர்ந்திருந்து பயணிப்பார்.
வேலைக்குச் செல்லும் கணவனை, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வரும் அப்பெண், வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலை வேளையில் பஸ் நிலையம் சென்று கணவனை அழைத்து வருவாள்.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்கூட்டிக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது.
எரிபொருளை நிரப்பும் போது, எரிபொருள் நிரப்புவரை தன் வலைக்குள் விழச்செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தொலைபேசி எண்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
அடிக்கடி குறுஞ்செய்திளை பகிர்ந்துகொண்ட இவ்விருவரும், காதல் வலைக்குள் விழுந்துவிட்டனர்.
இரண்டொருநாள் கடந்த நிலையில், பஸ்நிலையத்துக்கு காலையில் கணவனை ஏற்றிவந்த அப்பெண், எரிபொருள் நிரப்புவருடன் பறந்துசென்றுவிட்டாள்.
அன்றைய தினம் அலுவலகம் சென்று விட்டு மாலையில் வீட்டுக்குச் செல்வதற்காக, பஸ் நிலையம் திரும்பிய கணவன், மனைவியை காணாது அங்குமிங்கும் தேடியலைந்தார்.
மனைவியின் அலைபேசியும் இயங்கவில்லை.
ஆட்டோவொன்றை பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற கணவன், வீடும் பூட்டியிருந்தது.
மனைவியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
என்னசெய்வதென திகைத்திருந்த கணவனின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியொன்று வந்தது.
அதில், நான் மனம் கவர்ந்தவருடன் செல்கின்றேன். என்னை தேட வேண்டாம். நீங்கள். சந்தோஷமாய் இருங்கள் என இருந்துள்ளது.
இது குறித்து கணவன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மூவரையும் அழைத்த போலீசார், கணவனையும் மனைவியையும் சேர்த்து வைப்பதற்கு பலமுறை முயற்சித்தனர்.
எனினும், அது கைகூடவில்லை.
“நான், இவருடன் சந்தோஷமாக வாழ்கின்றேன்” என போலீசாரிடம் தெரிவித்த மனைவி, எரிபொருள் நிரப்புவருடன், மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுவிட்டார்.
கள்ளக்காதல் ஜோடி பறப்பதை பார்த்த கணவன், கண்ணீர் மல்க, போலீஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பினார்.
