Viral News
“வீட்டுக்கு தெரிஞ்சா; நம்மை வாழ விட மாட்டார்களே” – பயத்தில் கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு..!!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் நம் முன்னோர்கள் காலம் முதல் சொல்வது ண்டு.
ஆனால் காலப்போக்கில் திருமணம் என்பது சந்தர்ப்ப வாதத்தின் சூ.னியமாக மாறியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான அன்பு இல்லாததும், மனைவியோ, கணவனோ தமது துணையின் அன்பு கிடைக்காமல், வேறொரு தவறான துணையை தேடி செல்கின்றனர்.
அவ்வாறு திருமணத்தை தாண்டிய உறவு கொள்ளும் ஜோடிகளின் வாழ்வு மிக சீக்கிரமாக முடிவுக்கு வந்து விடுகிறது.
அந்த வகையில் கேரளாவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி, தங்களது குடும்பத்திற்கு தெரிந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என்றெண்ணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜி (38), சிவதாசன் தம்பதி.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தனது மனைவி ஷிஜியை காணவில்லை என சிவதாசன் காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷிஜியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொயிலண்டி ரயில் நிலையம் அருகே பெண், ஆண் இருவரது சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்திருக்கிறது.
உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று போலீசார் விசாரித்ததில், அங்கே கிடந்த பெண் சடலம் காணாமல் போனதாக அறியப்பட்ட சிவதாசனின் மனைவி ஷிஜி என தெரிய வந்தது.
மேலும் ஷிஜியுடன் கூட இருந்த நபர் முச்சுக்குன்னுவைச் சேர்ந்த ரனிஷ் (34) என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஷிஜிக்கும் ரனிஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது.
இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எண்ணி வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவியாக தனியாக குடும்பமே நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களது கள்ளக்காதல் விவகாரம் தங்களது வீட்டுக்கு தெரிந்தால், தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
