Connect with us

    ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு அடித்தது யோகம்; சினிமா சான்ஸ் கொடுக்க வலைவீசி தேடும் இசையமைப்பாளர் டி.இமான்..!

    Iman

    Cinema

    ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு அடித்தது யோகம்; சினிமா சான்ஸ் கொடுக்க வலைவீசி தேடும் இசையமைப்பாளர் டி.இமான்..!

    Iman

    பிரபல இசையமைப்பாளர் டி.இமான், பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார்.

    அந்த வகையில் தல அஜித், நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இவர் இசையில் வெளியான ‘கண்ணான கண்ணே’ மற்றும் அந்த படத்தில் வந்த, அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்திற்கு இசையமைத்து புகழ் பெற்றார்.

    சினிமா துறையில் டி.இமான் போராடி மேலே வந்தவர் என்பதால் தன் துறையை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கை கொடுத்து தூக்குவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார்.

    இதற்கு என தனி டீமையே உருவாக்கி பாடும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறார் இமான்.

    அந்த வகையில் சமீபத்தில் ஓடும் ரயிலில் பாடி பிரபலமான ஒரு பெண்ணை தேடி வருகிறார் இசையமைப்பாளர்.

    சமீபத்தில் வலைத்தளத்தை சுற்றி வந்த ஒரு வீடியோவில் ‘ஒரு பெண் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலைநேர்த்தியாக பாடியிருந்தார்’.

    அவரது குரலில் அத்தனை இனிமை இருந்தது.

    இந்த வீடியோ இணையத்தை அக்கிரமித்ததை தொடர்ந்து பலரும் இந்த பெண்ணுக்கு யாராவது நாள் வாய்ப்பு கொடுங்கள் என் கூறி இசை ஜாம்பவான்களின் ட்வீட் பக்கத்தோடு டேக் செய்து வந்தனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்துள்ளார்.

    விரைவில் அந்தப் பெண் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த செயல் குறித்து இமானுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!