Tamil News
துபாயில் ஆன்லைன் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு வென்ற இந்தியர்..!!
துபாயில் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளி ஷானவாஸ் முதல் பரிசான ரூ.10 கோடியை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 50 லட்சம் திர்ஹாம் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி ஆகும்.
லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற ஷானவாஸ் கூறும்போது,
வளைகுடா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
கடந்த 18 மாதங்களாக ஆன்லைன் லாட்டரி வாங்கி வந்தேன்.
இப்போது தான் பரிசு விழுந்துள்ளது. இந்த தொகையை கொண்டு எனது கடன்களை எல்லாம் அடைப்பேன்.
மீதி இருக்கும் பணத்தை வைத்து தொழில் தொடங்குவேன், என்றார்.
