Connect with us

    கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்த இரும்பு வியாபாரி…!

    Helicopter

    Tamil News

    கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்த இரும்பு வியாபாரி…!

    கோவில்பட்டி அருகே தனது சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக இரும்பு வியாபாரி ஒருவர் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நிகழ்வு அப்பகுதியிலுள்ள மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

    Helicopter

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் , ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் சிறப்பு யாக பூஜைகளும், சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.

    இதன் பின்னர் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    இதன் பின்னர் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார்.

    நடராஜனின் தந்தை பெயர் பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி.

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.

    பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை வைத்துள்ளனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளிக்கடை வருகிறார்.

    அவருடைய மூத்த மகன் நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை.

    அதே போன்று நடராஜன் மகன் மோகித்க்கும் ஹெலிகாப்டரில் செல்ல ஆசை.

    இதையெடுத்து மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு செல்ல பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார்.

    அதன் படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, அவரது மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர்.

    ஊருக்கு சென்றதும் அவரது நண்பர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    ஹெலிகாப்டரை ஆச்சரியத்துடன் பார்த்த கிராமத்தினர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் நடராஜன் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊர் திரும்பினார்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!