Connect with us

    “ஒரு நாள் வாடகை ரு.10 ஆயிரம்” – தன்னையே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளைஞர்..!!

    Japan youth

    World News

    “ஒரு நாள் வாடகை ரு.10 ஆயிரம்” – தன்னையே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளைஞர்..!!

    ஜப்பானில் இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டு அதிகளவில் பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Japan youth

    டோக்கியோவை சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ.

    கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார்.

    அந்த நிறுவனங்களில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டில் எவ்வித முதலீடும் இல்லாமல் புதிய தொழிலை தொடங்கினார்.

    பின்னர் சமூகவலைதளங்களில் கடைக்கு செல்வதற்கு ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை, எளிதான வேலைகளுக்கு ஆள் தேவை என்றால் என்னை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

    ஆனால் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன் என பதிவிட்டார்.

    இதைப் பார்த்த பொதுமக்களில் பலர், ஷோஜி மோரிமோட்டாவை வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.

    3000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் தனக்கு வந்துள்ளதாக கூறும் ஷோஜி ஒரு கோரிக்கைக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூலிப்பதாக கூறுகிறார்.

    வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், பொருட்களை தூக்க வேண்டும் என்று அழைத்தால் அவர்களோடு செல்ல மாட்டேன்.

    பாலியல் ரீதியாக அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவேன். வாடிக்கையாளர்களோடு பொழுதை கழிக்க மட்டுமே செல்வேன்.

    அவர்களின் மனக்குறைகளை என்னிடம் கூறுவார்கள்.
    இதன்மூலம் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் ஷோஜி பேசுகையில், ஒரு நபருடன் ஹெலிகாப்டர் சவாரி கூட சென்றுள்ளேன்.

    ஆழ்ந்த தனிப்பட்ட சவால்களைச் சந்திக்கும் நபர்களை சந்திக்கும் போது அனுதாபம் ஏற்படும் என கூறியுள்ளார்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!