Tamil News
அடப்பாவமே!! இவங்களுக்கா இந்த நிலைமை! நாட்டுக்கு சேவை செய்தா இப்படித்தான் இருக்கணும் போல; கக்கன் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!!
மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதனுக்கு இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.
அமைச்சர் பதவியில் இருந்த கக்கன் அதிகபட்சமாக நேர்மையை கடைப்பிடித்தவர். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தார்.
1971 இல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கக்கனுக்கு வெற்றி கிட்டவில்லை. இதனால் அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.
கக்கனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
சாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன்.
மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.
அவரது நிலைமையை பார்த்து தவித்த எம்.ஜி.ஆர். இவர் யார் என்று தெரியுமா? சுதந்திரத்துக்கு போராடிய வரும் தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கக்கன் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
உடனே மருத்துவர்களிடம் அவருக்கு தனி அறை ஏற்பாடு செய்து உயர் சிகிச்சை வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
ஆனால் கக்கன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
ஆனால் சில நாட்களில் அவர் இறந்து போனார்.
அரசியலில் அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.
நேரம் வரும்போது இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும், அவரது குடும்பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, மருத்துவ வசதிகள் கிடைக்கும்படியும் எம்ஜிஆர் செய்தார்.
தனது இறுதி மூச்சு வரை நேர்மையை கடைப்பிடித்த கக்கனை போன்ற இன்னொரு தலைவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
கடைசி வரை சொந்தமாக வீடு கூட இல்லாதவர் கக்கன். இந்த நிலையில் கக்கனுடைய மகனும் தந்தையை போல் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்.
கக்கனுக்கு பாக்கியநாதன் (75) என்ற மகன் உள்ளார். இவருக்கு சிறுநீரகமும் இதயமும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ரூ 4 ஆயிரம் தேவைப்படுகிறது. ஆனால் அதை செலுத்த முடியாத நிலையில் பாக்கியநாதன் குடும்பத்தினர் உள்ளனர்.
முதல்வரின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையும் பாக்கியநாதனுக்கு இல்லை. அந்த கார்டை பெற கக்கனின் பேரன் அதாவது பாக்கியநாதனின் மகன் முயற்சித்து வருகிறார்.
தனது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என பாக்கியநாதனின் மனைவி சரோஜினிதேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
அது போல் கணவரின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சிஐடி காலனியில் இவரது குடும்பம் வசித்து வந்தது.
இந்தக் காலனியில் பிளாட் எண்.35 ஆனது, கக்கனுக்கு 1971-ம் ஆண்டில் வாடகையின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1981-ல் அவரது இறப்பிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தனர். அதேபோல, இங்குதான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவும் குடியிருந்தார்.
3 வருடங்களுக்கு முன்பு, இங்குள்ள அனைவருமே வீட்டை காலி செய்யும் சூழல் ஏற்பட்டது.
அப்போது நல்லகண்ணு, “எங்களுக்கு பரவாயில்லை. காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனுக்கு, எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வீடு தந்தாங்க. வாடகை இல்லாமலே இருந்தார்.
இப்போது அவர் குடும்பத்தினர் அங்கு இருக்கிறாங்க. அவங்களை வெளியேற்ற வேண்டாம்” என்று கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது
