Viral News
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பல் வலிக்காக சிகிச்சை பெற்ற கன்னட நடிகையின் முகம் வீங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி.
இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் சுவாதி நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.
அதன்பேரில் அந்த ஊசியை சுவாதி செலுத்தி உள்ளார்.
ஊசியை செலுத்திய பிறகு சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் மெல்ல, மெல்ல வீங்கியுள்ளது.
ஊசி செலுத்தியதால் முகம் வீங்கியுள்ளதாகவும் விரைவில் வீக்கம் வற்றி இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தொடக்கத்தில் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், கடந்த 20 நாட்கள் ஆகியும் சுவாதிக்கு முகத்தின் வீக்கம் குறையவில்லை.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை.
இந்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு தன்னுடைய நிலை குறித்து சுவாதி சமூகவலைதளம் மூலமாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
சுவாதியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ரசிகர்கள் பலரும் சுவாதியின் நிலை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர்.
