Viral News
சமையல் வேலைக்கு மலேசியா செல்ல திட்டமிட்டிருந்த கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு…!
மலேசியாவுக்குச் சமையல்காரராகப் பணிபுரியத் திட்டமிட்டிருந்த கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் ஒருவர் மகனின் உண்டியல் காசு எடுத்து லாட்டரி வாங்கியதில் ரூ.25 கோடி பரிசு வென்றுள்ளார்.
திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் என்பவருக்கு லாட்டரியில் இந்த பரிசு கிடைத்துள்ளது.
வெற்றிக்கான இந்த டிக்கெட்டை – TJ 750605 – சனிக்கிழமை வாங்கினார்.
ஆனால் அது தனது முதல் தேர்வு அல்ல என்று கூறினார். அவர் தேர்ந்தெடுத்த முதல் டிக்கெட் பிடிக்கவில்லை, எனவே அவர் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.
அந்த டிக்கெட் தான் இன்று 25 கோடி ரூபாயை வென்றுள்ளது.
ரூ.25 கோடி பரிசு கிடைத்தது உறுதி செய்யப்பட்டவுடன் அனூப் உற்சாகமடைந்துள்ளார். லாட்டரியில் முதல்பரிசு கிடைத்தது குறித்து அனூப் கூறியதாவது:
நான் மலேசியா சென்று, சமையல் கலைஞராக வேலை செய்ய முடியு செய்தேன். இதற்காக வங்கியில் லோன் கேட்டு ரூ. 3 லட்சமும் கிடைத்துவிட்டது.
ஆனால், நேற்று காலை தொலைக்காட்சியைப் பார்த்தபோது நான் வைத்திருந்த லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தாக அறிவித்தார்கள்
இதைக் கேட்டதும் எனக்கு நம்பிக்கையில்லை. என்னுடைய லாட்டரி சீட்டை எடுத்து பரிசோதித்தபின்புதான் எனக்கு பரிசு கிடைத்தது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் என் செல்போனிலும் நான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்ததாக எஸ்எம்எஸ் வந்தது.
அதன் பின்புதான் நம்பினேன். என்னால் நம்பமுடியவில்லை, உடனடியாக என் மனைவியிடம் கூறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.
கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன். இதுவரை எனக்கு ரூ.5 ஆயிரம் மட்டும்தான் அதிகபட்சமாக பரிசு கிடைத்திருந்தது.
முதல்முறையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. எனக்கு வங்கியிலிருந்து தொலைப்பேசி அழைப்பில் லோன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ள செய்தியைக் கூறி எனக்கு லோன் தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டேன்
என்னுடைய முதல் பணி சொந்தமாக வீடு கட்டுவது அதன்பின் எனக்கிருக்கும் சிறிய கடன்களை அடைப்பதாகும்.
அதன்பின் கேரளாவில் சிறிய அளவில் ஹோட்டல் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்”எனத் தெரிவித்தார்.
அனூப்புக்கு கிடைத்த ரூ.25 கோடி லாட்டரி பரிசில் 40 சதவீதம் வரியாக எடுக்கப்பட்டு, ரூ.15 கோடி கைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
அனூப்புக்கு மாயா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது பரிசாக ரூ.5 கோடியும், 3-வது பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1 கோடி வீதமும் வழங்கப்படுகிறது.
