Connect with us

    இரண்டு கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கையுடன் மிகப்பெரிய ஆறை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவன்; குவியும் பாராட்டுக்கள்…!!

    Viral News

    இரண்டு கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கையுடன் மிகப்பெரிய ஆறை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவன்; குவியும் பாராட்டுக்கள்…!!

    கேரளாவில் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் நீச்சல் பழகி ஆற்றைக் கடந்து சாதனைப் படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    Kerala boy swim with no hands

    கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமெண்ண பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷஹீத்.

    இவரின் மகன் முஹம்மது அஸீம் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கைகள் இல்லாமல் 90 சதவீதம் குறைபாட்டுடன் பிறந்தார்.

    உடல் பலம் குறைந்திருந்தாலும் சிறுவனிடம் தன்னம்பிக்கை அதிமாக இருந்தது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்கிறது.

    90 சதவீத உடல் குறைபாடுடைய முகமது அசீம், தனது இரு கால்களையும் உடலையும் அசைத்து சுமார் ஒரு மணி நேரம் கேரளாவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஆலுவ, பெரியாறு ஆற்றை நீந்தி கடந்துள்ளார்.

    சிறுவனின் இந்தச் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கைகள் இல்லாமல் வலுவிலந்த கால்களைக் கொண்டு அவர் ஆற்றில் நீச்சல் அடிப்பதைக் கண்டு சுற்றியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

    இரண்டு வார கடின பயிற்சிக்கும் உழைப்புக்குப் பிறகு தான் அஸீம் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதாக அவனது பயிற்சியாளர் சஜி வாலாசேரி தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது உடல் குறைபாட்டை வெல்லும் மன வலிமை மற்றும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்ததால் தான் இந்த சாதனையை அவரால் படைக்க முடிந்ததாக சஜி கூறியுள்ளார்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!