Connect with us

    கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது பெயிண்டருக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்; ரூ.1 கோடி லாட்டரி பரிசு கிடைத்த அதிசயம்..!!

    Mohd wins lottery

    Viral News

    கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது பெயிண்டருக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்; ரூ.1 கோடி லாட்டரி பரிசு கிடைத்த அதிசயம்..!!

    கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது பெயிண்டருக்கு சூப்பர் ஜாக்பாட் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Mohd wins lottery

    கேரளாவைச் சேர்ந்தவர் முகமது. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தன்னுடைய மகள்கள் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

    கடன் தொல்லையிலிருந்து விடுபட தன்னுடைய சொந்த வீட்டை ரூ.45 லட்சத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தார்.

    இதனையடுத்து, அவர் கடந்த 24ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விற்க முன்பணம் வாங்க இருந்தார்.

    ஆனால், அதற்கு முன் 3 மணிக்கு அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி விழுந்தது.

    இதனால், பெயிண்டர் முகமது மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.

    கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது, லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

    தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்து உள்ளது. மீறி விற்கப்பட்டால் சிறை தண்டனையும் நீதிமன்றத்திற்கு அபாரதமும் விதிக்கப்படுகிறது.

    ஆனால், கேரளா மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை அரசே நடத்துகிறது.

    அரசுக்கு மிக முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அம்மாநிலத்திற்கு கிடைக்கிறது.

    கேரளாவில் அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது.

    வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!