Connect with us

    “நான் அதற்கு அடிமையாகி விட்டேன்” – மாணவி எடுத்த பகீர் முடிவு; கண்ணீரில் பெற்றோர்..!

    Kerala girl

    Viral News

    “நான் அதற்கு அடிமையாகி விட்டேன்” – மாணவி எடுத்த பகீர் முடிவு; கண்ணீரில் பெற்றோர்..!

    Kerala girl

    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன்.

    11 ஆம் வகுப்பு மாணவியான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவி எழுதியிருந்த மூன்று பக்க கடிதம் கிடைத்தது.

    அதில், “நான் செல்போனுக்கு அடியிமையாகி விட்டேன். என்னால் அதில் இருந்து மீளமுடியவில்லை.

    எனவே நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என எழுதப்பட்டிருந்தது.

    தொடர்ந்து போலீசார் மாணவியின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர்கள் கூறியதாவது, “எனது மகள் நன்றாக படிக்க கூடியவள்.

    தினமும் அவளது அறையின் கதவை சாத்திக்கொண்டுதான் படிப்பாள். கடந்த சனிக்கிழமை அப்படிதான் படித்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்தோம்.

    சாப்பிட வருமாறு கதவை தட்டிய போது தான் அவள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போனோம்” என்றனர்.

    இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, மாணவி செல்போனுக்கு அடிமையானதற்கான பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    அடிக்கடி யூ டியூபில் கொரியன் பாடகர்களின் நிகழ்ச்சியை பார்த்ததாக தெரிகிறது.

    சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இல்லை. இருப்பினும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!