Uncategorized
விடுதியில் உல்லாசமாக இருந்த போது, திடீரென அழுத 1.5 வயது பேத்தியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்..!!
கேரளாவில் விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிக்கு இடையூறாக பெண்ணின் பேத்தி இருந்ததால், அக்குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியை சேர்ந்தவர் சஜீஸ். இவரது மனைவி டிக்சி
இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் நோரா மரியா என்ற ஒரு பெண் குழந்தை. சஜீவனின் தாய் சிப்சி அவருக்கு வயது 50.
தாய், மகன் 2 பேரும் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவரம் முதலில் டிக்சிக்கு தெரியாது.
இந்நிலையில் அதன் பின்னர் தெரிந்ததும், கணவனை விட்டு விலகி டிக்சி தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் டிக்சிக்கு துபாயில் ஒரு ஓட்டலில் வேலை கிடைத்தது.
இதையடுத்து குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு துபாய் சென்றார்.
இதற்கிடையே தனது குழந்தைகள், மனைவியின் வீட்டில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி சஜீவ் குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் செய்தார்.
இதையடுத்து குழந்தைகள் 2 பேரையும் சஜீவின் பெற்றோரிடம் ஒப்படைக்க குழந்தைகள் நல அமைப்பு உத்தரவிட்டது.
இதனால் கடந்த சில மாதங்களாக 2 குழந்தைகளையும் சஜீவின் தாய் சிப்சி தான் கவனித்து வந்தார்.
இந்நிலையில், சிப்சிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜான் பினாய் (வயது 27) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி பல நேரங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
மேலும், விடுதியில் தங்கியிருந்தும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தீப்தி – ஜான் பினாய் கள்ளக்காதல் ஜோடி விடுதியில் அறையெடுத்து தங்கி உல்லாசமாக இருந்தது.
விடுதிக்கு தனது பேத்தியையும் சிப்சி அழைத்து சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, கள்ளக்காதல் ஜோடி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளது.
அங்கு இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, இந்த ஜோடி நள்ளிரவில் உல்லாசமாக இருந்த நிலையில், இவர்களின் உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜான் குழந்தையை குளியலறை வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, ஜானை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் சிப்சிக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.
கள்ளக்காதல் விவகாரம் பேத்தியின் உயிரை பறித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
