Connect with us

    நாட்டிலேயே முதன் முறையாக காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட திருநங்கை- திருநம்பி ஜோடி; குவிந்த வாழ்த்துக்கள்…!!

    transgender Siyama Prabha and Manu Karthika

    Viral News

    நாட்டிலேயே முதன் முறையாக காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட திருநங்கை- திருநம்பி ஜோடி; குவிந்த வாழ்த்துக்கள்…!!

    காதலர் தினமான நேற்று கேரளாவில் திருநங்கை, திருநம்பி காதல் ஜோடி உறவினர், நண்பர்கள் முன்னே திருமணம் செய்து கொண்டனர்.

    transgender Siyama Prabha and Manu Karthika

    கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார்.

    இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் சியாமா பிரபா (31).

    இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்

    இந்த நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரியில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    transgender Siyama Prabha and Manu Karthika

    திருமணம் முடிந்த பின் பேசிய சியாமா எஸ் பிரபா, ‘காதலர் தினத்தன்று திருமணம் செய்ய நாங்கள் எந்த முடிவும் செய்யவில்லை.

    வழக்கமாக திருமணத்தை பதிவுசெய்யும்போது ஆண், பெண் என்ற அடையாளத்துடன் பதிவு செய்வது வழக்கம்.

    நாங்கள் எங்கள் திருமணத்தை இரு மூன்றாம் பாலினத்தவருக்கு இடையிலான திருமணம் எனபதிவு செய்ய உள்ளோம்.

    அப்படி பதிவு செய்வதில் நாங்கள் வென்றுவிட்டால் இந்தியாவிலேயே முதன்முதலில் அப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம் இதுதான்.

     

    எங்களது பெற்றோர்கள் ஜாதகம் பார்த்து இந்த நாளை முடிவு செய்தனர். எல்லா விதமான காதலையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    தற்போது இவர்களின் திருமணம் சட்டப்படி செல்லாது.

    இருப்பினும் இவர்கள் இதனைச் செல்லுபடியாக அறிவிக்கக் கோரி மாற்ற நீதிமன்றத்தை அணுகவுள்ளனர்.

    இந்தக் காதல் தம்பதியினர் தங்கள் திருமண விழாவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

    நாட்டில் திருநங்கைகளின் வளர்ச்சியில் தங்கள் திருமணம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறினர்.

     

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!