Connect with us

    7 ஆண்டுகளாக கணவனுக்கு உணவில் மெல்ல கொல்லும் விஷம் கொடுத்த மனைவி; அதன்பின் நடந்த விபரீதம்..!!

    kerala woman Asha mixing poison in food

    Uncategorized

    7 ஆண்டுகளாக கணவனுக்கு உணவில் மெல்ல கொல்லும் விஷம் கொடுத்த மனைவி; அதன்பின் நடந்த விபரீதம்..!!

    கேரளாவில் தனது கணவரை கொல்ல 7 ஆண்டுகளாக உணவில் விஷம் (mixing poison in food)  கலந்து தொடர்ந்து கொடுத்து வந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    kerala woman Asha mixing poison in food

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷும் கோட்டயம் பாலா பகுதியைச் சேர்ந்த ஆஷாவும் கணவன் மனைவி. ஐஸ்க்ரீம் பார்லர்களுக்கு ஐஸ்க்ரீம்களை சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் சுரேஷ்.

    இவர் கடந்த 2012ம் ஆண்டு கோட்டயத்தில் பாலா பகுதியிலேயே சொந்தமாக வீடுகட்டி குடிபெயர்ந்தார். அதன் பிறகு சுரேஷுக்கும், ஆஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதனையடுத்து சுரேஷுக்கு தொடர்ந்து உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவருக்கு எந்த பலனும் கிட்டவில்லை.

    இந்த நிலையில், பணி நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூரில் தங்கியிருந்த சுரேஷுக்கு எந்த உபாதையும் ஏற்படவில்லை.

    ஆனால் வீடு திரும்பியதும் பழையபடி அவருக்கு உடல்நலம் சரியாமல் போனது. இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் மனைவி ஆஷாவை கண்காணித்தார்.

    மெடிக்கலில் தொடர்ந்து ஆஷா மருந்து வாங்குவதை கவனித்த சுரேஷ் ஆஷாவின் தோழியிடம் விசாரித்ததில் உண்மை தெரியவந்திருக்கிறது.

    அதன்படி 2015ம் ஆண்டு முதலே சாப்பிட்டில் ஆஷா தனக்கு மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்து வந்திருக்கிறார்.

    அவ்வாறு செய்தால் தன் மீது எந்த சந்தேகமும் எழாது என ஆஷா திட்டமிட்டதை தெரிந்து கொண்டார் சுரேஷ்.

    இது தொடர்பாக உடனடியாக போலீஸிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அதன் பேரில் ஆஷாவை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!