Connect with us

    18 ஆண்டுகள் குழந்தையில்லாமல் தவித்த பெண் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம்..!!

    Woman gives birth quadruplets

    Viral News

    18 ஆண்டுகள் குழந்தையில்லாமல் தவித்த பெண் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம்..!!

    திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த கேரளாவைச் சேர்ந்த 42 வயது பெண்மணி, ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

    Woman gives birth quadruplets

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அதிரம்புழ பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி.

    இந்த தம்பதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் 18 வருடங்களுக்கு மேலாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தனர்.

    இதில் மனம் தளர்ந்திருந்த இந்தத் தம்பதி, கோட்டயத்தில் உள்ள மகப்பேறு மருத்துவர்களை அணுகியிருக்கின்றனர்.

    அவர்கள் அளித்த செயற்கை கருவூட்டல் சிகிச்சையின் மூலம், பிரசன்னா குமாரி கருவுற்றிருக்கிறார்.

    குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

    அன்றில் இருந்து மருத்துவரின் ஆலோசனை படி பாதுகாப்புடன் கண்ணும் கருத்துமாக குழந்தையை பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பிரசன்ன குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    கணவர் சுரேஷ் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 4 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

    இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறுகையில்,

    எங்கள் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல்முறை.

    ஆகையால் அந்தப் பெண்ணின் பிரசவ செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது.

    பிரசவத்திற்கு பின், தற்போது நான்கு குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    இது குறித்து அந்த பெண்ணின் கணவர் சுரேஷ் கூறுகையில்,

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் என் தோள்பட்டை முறிவால் பாதிக்கப்பட்டது. வேலைக்கு ஏதும் செல்லாமல் சிரமப்பட்டு வந்தேன்.

    குழந்தை பேறு வேண்டி என்னுடைய வீட்டை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் வரை செலவழித்தேன்.

    தற்போது எனக்கு 4 குழந்தைகள் பிறந்துள்ளதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

    பெண் குழந்தைக்கு சுரேஷின் அம்மாவின் பெயரான லட்சுமி என்று வைத்துள்ளார். மற்ற 3 ஆண்குழந்தைகளுக்கும், சங்கரன், காசிநாதன், கார்த்திக் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததையடுத்து, உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் குழந்தையை வந்து பார்த்து, தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!