Connect with us

    டிக் டாக்கில் ஒரு வீடியோ போட்டால் ரூ. 6 கோடி; இன்றைய சொத்து மதிப்பு ரூ.700 கோடி; வியக்க வைக்கும் 22 வயது இளைஞர்…!

    Khaby Lame

    World News

    டிக் டாக்கில் ஒரு வீடியோ போட்டால் ரூ. 6 கோடி; இன்றைய சொத்து மதிப்பு ரூ.700 கோடி; வியக்க வைக்கும் 22 வயது இளைஞர்…!

    Khaby Lame

    டிக்டாக் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வர்த்தகத் தளமாக மாறியுள்ளது.

    சீன நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொழுதுபோக்குச் செயலியாக இருக்கும் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் உலகில் பல நாடுகளில் இன்னும் கொடிகட்டிப் பறந்து வருகிறது என்றால் மிகையில்லை.

    டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் ஏராளம்.

    ஆனால் Khaby Lame என்பவர் டிக்டாக் வாயிலாக தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

    கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் தான் இந்த Khaby Lame.

    ஹோட்டல், வீடுகளில் வேலை செய்து வந்த நிலையில், வேலை இழந்த விரக்தியில் டிக்டாக் செய்து பிரபலமானார்.

    Khaby Lame

    டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிக பாலோவர்களைக் கொண்டு உள்ளது Khaby Lame தான்.

    இவரது டிக்டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.

    இன்று டிக்டாக், இன்ஸ்டா தளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 750000 டாலர் வாங்குகிறார்,

    அதாவது கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் Khaby Lame.

    இவருடைய அபார வளர்ச்சி பலருக்கும் வியப்பு அளிக்கிறது.

    ஒரு சாதாரண வேலையைச் செய்து வந்த Khaby Lame இன்று 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்டவுள்ளார்.

    அதனோடு, Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள்,

    சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

    Khaby Lame சற்று வித்தியாசமானவர் ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டும் அல்லாமல் உணவகம் நடத்தி வருகிறார், சில மென்பொருள் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார்.

    ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் இருந்து வந்த காரணத்தால் என்னவோ மிகவும் பொறுப்புடனும், எதிர்காலத்தின் மீதான பயத்துடனும் நிதானமாகச் செயல்படுகிறார்.

    2020 பிற்பகுதியில் இருந்து 2022க்குள் இவருடைய வாழ்க்கையை டிக்டாக் வீடியோக்கள் தலைகீழாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!