Connect with us

    இரண்டு குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்..!!

    kollam mother left two children and went to illegal affair

    Viral News

    இரண்டு குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்..!!

    திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் நம் முன்னோர்கள் காலம் முதல் சொல்வது ண்டு.

    ஆனால் காலப்போக்கில் திருமணம் என்பது சந்தர்ப்ப வாதத்தின் சூ.னியமாக மாறியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

    கணவன் மனைவி உறவுகள் கசந்து போவதால் விவாகரத்து ஒருபுறம் நடக்கிறது என்றால், மற்றொரு புறம் தங்கள் இணைக்கு தெரியாமல் மற்றொரு கள்ள உறவுக்குள் செல்வதும் அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக கொலை, தற்கொலை உள்ளிட்ட அதீத காரியங்களில் ஈடுபடவும் தயங்குவதில்லை. தன் இணையின் கள்ள உறவு குறித்து கேள்விப்படும் போது உடைந்து நொறுங்கி போகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது.

    இரண்டு குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    kollam mother left two children and went to illegal affair

    கேரள மாநிலம் கொல்லம் புனலூர் பகுதியை சேர்ந்த 30 வயதான சின்னு, தன் கணவருடனும் , 5 மற்றும் 9 வயதுகளில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார் .

    அந்த பெண்னின் கணவர் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அதனால் அவர் தன் மனைவி சின்னு மற்றும் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு , ஏதாவது ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார்.

    அதனால் அந்த பெண் வீட்டில் தனிமையில் இருந்ததால் அவருக்கு வாழ்க்கை போர் அடித்துள்ளது.

    அதனால் அந்த சின்னு, கொல்லம் பகுதியை சேர்ந்த வாலிபருடன் கள்ள காதலை வளர்த்து கொண்டார்.

    இந்த கள்ள பழக்கத்தால் கடந்த இரண்டு வருடமாக இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த கள்ள காதலன், தன்னுடனே வந்து விடுமாறு அந்த சின்னுவிடம் கூறியுள்ளார்.

    அதனால் அவரின் பேச்சில் மயங்கிய சின்னு, தனது இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு கடந்த 6 மாததங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார்.

    அதன் பிறகு அனாதையாக தவித்த அவரின் இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள்.

    இதுகுறித்து புனலூர் காவல் நிலையத்தில் அவரின் உறவினர்கள் புகார் கொடுத்தனர்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் , அந்த பெண் திருச்சூரில் இருப்பது தெரியவந்தது. அதனால் அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சின்னுவை கைது செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!