Connect with us

    ரூ.390 செலுத்தினால் போதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உங்கள் வீடு தேடி வரும்; அஞ்சல் நிலையங்கள் சிறப்பு ஏற்பாடு..!

    Candy-post-office

    Tamil News

    ரூ.390 செலுத்தினால் போதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உங்கள் வீடு தேடி வரும்; அஞ்சல் நிலையங்கள் சிறப்பு ஏற்பாடு..!

    தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் புகழ் பெற்றது.

    Candy-post-office

    அங்கு தயாரிக்கப்படும் சுவை மிக்க கடலை மிட்டாய் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.

    வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    சமீபத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாயை உலகளவில் கொண்டு செல்ல தபால்துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.

    இந்நிலையில், கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையை அதிகரிக்க, அஞ்சல்துறை மூலம் அதை வீட்டுக்கே கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி தபால் நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும்.

    இதன் விலையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் எந்த தபால் நிலையத்திலும் நீங்கள் 390 ரூபாய் கொடுத்து கடலை மிட்டாய் ஆர்டர் செய்யலாம்.

    அங்கிருந்து கோவில்பட்டி தலைமை அஞ்சலக இணையம் மூலம் ஆர்டர் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் வீட்டிற்கே விரைவு அஞ்சல் மூலம் கொண்டு வரப்படும்.

    ஆர்டர் செய்வதற்கும், டெலிவரி செய்வதற்கும் தனியாக கட்டணம் எதுவும் கிடையாது.

    அந்த 390 ரூபாயிலேயே கட்டணம் போன்ற செலவுகள் அடங்கிவிடும்.

    ரூ. 390 மட்டும் கொடுத்து ஆர்டர் செய்தால் போதும். ஒரு கிலோ எடை கொண்ட கடலை மிட்டாய் பார்சலில் 5 கடலை மிட்டாய் பாக்கெட் இருக்கும்.

    மேலும் வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாகவும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாயை ஆர்டர் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    போஸ்ட் ஆபீஸ் மூலமாக கடலை மிட்டாயை விற்பனை செய்யும் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!