Tamil News
“காதல் திருமணம் செய்து 6 மாதம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படியா” இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்…!!
முதுகலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்விற்காக தயாராகி வந்த நிலையில் பெண் மருத்துவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக்(30).
இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி ராசி(27). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
ராசி கடந்த 2020ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மேற்படிப்பிற்காக நீட் தேர்வு எழுத கடந்த 3 மாதங்களாக தயாராகி வந்தார்.
இதற்காக மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மருத்துவர் ராசி வீட்டின் 3வது மாடியில் படிக்க சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது தாய் டாக்டர் செந்தாமரை மாடிக்கு சென்று பார்தத்துள்ளார்.
அப்போது, கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் அருகில் இருந்த ஜன்னல் வழியாக செந்தாமரை பார்த்த போது ராசி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறைக்கதவை உடைத்து ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக ராசி கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
