Tamil News
கடற்கரையில் (Merina beach) கசமுசாவில் ஈடுபட்ட காதல் ஜோடி; தட்டிக் கேட்ட வக்கீல்களின் மண்டையை உடைத்த கும்பல்..!!
சென்னை மெரினா கடற்கரையில் (Merina beach) கசமுசாவில் ஈடுபட்ட காதல் ஜோடியை தட்டி கேட்ட வழக்கறிஞர்கள் இருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும்.
சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மெரினா பீச்சுக்கு விசிட் அடிக்காமல் செல்வதில்லை.
அந்த அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது மெரினா பீச்.
தினந்தோறும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர், காதல் ஜோடிகள் அதிக அளவில் வருகை வழக்கம்.
சில சமயங்களில் பொதுமக்கள் இருந்தும் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள் துரித உணவகத்தில் சாப்பிட்டனர்.
அப்போது, மணல் பரப்பில் இருந்த காதல் ஜோடியிடம், இளம் பயிற்சி வழக்கறிஞர்களான ராயபுரத்தைச் சேர்ந்த பிரதீப், 23, மற்றும் கொரட்டூரைச் சேர்ந்த நாகராஜ், 26, ஆகியோர், பொது இடத்தில் தவறாக நடந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்
இதையடுத்து ஆத்திரமடைந்த காதலர் தனது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர், வழக்கறிஞர்களை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.
இதில் வழக்கறிஞர் நாகராஜ் மற்றும் பிரதீப் இருவரின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதனையடுத்து, ரத்தம் சொட்ட சொட்ட இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மண்டையில் 5 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
