Connect with us

    பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல்; கோலாகலமாக திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!!

    Girls marriage

    Viral News

    பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல்; கோலாகலமாக திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!!

    கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணிற்கும், மற்றொரு பெண்ணிற்கும் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Girls marriage

    கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண், வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை குடும்பத்தார் சம்மதத்துடன் பாரம்பரிய முறையில் சென்னையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த சுபிக்க்ஷா சுப்பிரமணி பிறப்பால் பெண்ணாக இருந்தார்.

    ஆனால், தனது 19 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் bisexual (இரு பால் ஈர்ப்பு) கொண்டவர் என்பதை உணரத் தொடங்கினார்.

    சுபிக்க்ஷா கனடாவில் உள்ள கால்கேரியில் வசித்து வருகிறார். அதே போல வங்கதேசத்து பாரம்பரிய இந்துக் குடும்பத்தை சேர்ந்தவர் டினா தாஸ்.

    சுபிக்‌ஷா பெற்றோர் கனடாவில் செட்டில், ஆன நிலையில் டினாவின் பெற்றோரும் 2003ல் கனடாவில் செட்டில் ஆனார்கள்.

    இருவரும் கனடாவில் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமாகி பழகி, தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

    சென்னையில் வைத்து சுபிக்‌ஷாவின் குடும்ப பாரம்பரிய முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

    இது குறித்து சுபிக்‌ஷா கூறுகையில், நான் பிறந்தது மதுரையில். கத்தார் நாட்டில் வளர்ந்தேன்.

    19 வயதில் என் உடலில் பெண் தன்மை மறைந்து ஆண் தன்மை வந்ததைப் பார்த்தபின், கனடாவுக்கு குடிபெயர்ந்தேன்.

    என் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை என் பெற்றோர்களால் ஏற்க முடியவில்லை.

    பின்னர் அவர்களுக்கு முறைப்படி கவுன்சிலிங் அளித்தபின் புரிந்தனர் என்றார்.

    Girls marriage

    சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ண புஷ்கலா கூறுகையில், சுபிக்ஸாவின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது.

    இந்தியாவில் உள்ள எங்களின் குடும்பத்தினர் எங்கள் தொடர்பை துண்டித்துவிடுவார்களே என்று அச்சப்பட்டோம்.

    மேலும் இந்தச் சமூகத்தில் சுபிக்ஸா எவ்வாறு வாழப்போகிறார், தாய்மையை எவ்வாறு அடைவார் என்ற அச்சமும் இருந்தது.

    என் குடும்பத்தின் ஒற்றுமை முக்கியம், மகளின் மகிழ்ச்சி முக்கியம் என்று எண்ணினேன் எனத் கூறியுள்ளார்.

    இது குறித்து டினா தாஸ் கூறுகையில், திருமணம் செய்து 4 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தபின் தன்னை ஒரு லெஸ்பியன் என்று உணர்ந்தார்.

    இதனால் கணவரைவிட்டு பிரிந்தார். இந்த பிரிவுக்கு பின்னர் டினாவின் சகோதரி அவரை விட்டு ஒதுங்கியுள்ளார்.

    கனடாவில் திருமணத்தை இந்த தம்பதிகள் பதிவு செய்துள்ளனர். மீண்டும் கனடாவுக்கு செல்லும் முன்னர் தப்போது தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணிக்க உள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!