Connect with us

    “தமிழர் பாரம்பரியம் எனக்கு மிகவும் பிடித்து போனது” – கடலூர் என்ஜினியரை காதல் திருமணம் செய்த லண்டன் பெண் பேட்டி..!

    Tamil News

    “தமிழர் பாரம்பரியம் எனக்கு மிகவும் பிடித்து போனது” – கடலூர் என்ஜினியரை காதல் திருமணம் செய்த லண்டன் பெண் பேட்டி..!

    சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் லண்டன் பெண்ணுடன் காதல் மலர்ந்து அவரை கரம் பிடித்த கடலூர் என்ஜினீயருக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    London girl

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.

    இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த அன்னாலுய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    அப்போது ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது.

    தொடர்ந்து இவர்களது கடல் கடந்த காதல் மலரும் வகையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்.

    இதனையடுத்து நேற்று கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார்.

    அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார்.

    பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித் அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

    பின்னர் மணமகன் ரஞ்சித் கூறுகையில், நான் பொறியாளர் பட்டபடிப்பு முடித்து கடந்த பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

    அப்போது ஒரே நிறுவனத்தில் நானும், அன்னாலுய்சா வும் பணி புரிந்து வந்தோம்.

    அப்போது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.

    பின்னர் நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதம் பெற்றவுடன் தமிழ் முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினோம் என்றார்.

    மணமகள் அன்னாலுய்சா கூறுகையில், நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

    மேலும் எனக்கு இந்திய கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்து மிகவும் பிடித்தது.

    மேலும் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை மங்கல வாத்தியம் போன்றவற்றை மூலம் திருமணம் நடைபெற்றது.

    ரஞ்சித்தை காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக்கொண்டு புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில்  ரஞ்சித்தை திருமணம் செய்தேன் என்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!