Connect with us

    காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால்; தண்டவாளத்தில் படுத்து கணவர் தற்கொலை..!!

    Love couple committed suicide

    Tamil News

    காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால்; தண்டவாளத்தில் படுத்து கணவர் தற்கொலை..!!

    காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், அதனை தாங்கி கொள்ள முடியாத கணவனும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    Love couple committed suicide

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்.

    இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த சரண்யாவின் உறவினர்கள் ரவிக்குமாரை தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்.

    இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த ரவிக்குமார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர் மீது ஏறியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
    அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!