Uncategorized
காதல் திருமணம் செய்த இளம் ஜோடி எடுத்த பகீர் முடிவு; கலங்கும் உறவினர்கள்..!
காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகபிரபு – துர்காதேவி தம்பதி. இந்த புதிய தம்பதி, நேற்றைய தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காடுபட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ், ஏட்டு பாபுகாந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று லோகபிரபு, துர்காதேவி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லோகபிரபுவும், துர்காதேவியும் மதுரை தனியார் கல்லூரியில் படித்தது முதல் காதலித்து வந்துள்ளனர்.
தற்போது வேலைதேடி வருவதாகவும், வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்தான் இவர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
