Connect with us

    ஊரை விட்டு ஓடி வந்து, கன்னியாகுமரி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

    Love pair

    Tamil News

    ஊரை விட்டு ஓடி வந்து, கன்னியாகுமரி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

    கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஷோடி விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Love pair

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நெல்லை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிவன்கோயில் 7வது தெருவை சேர்ந்த அஜித்குமார் மற்றும் பிரீத்தி என்பது தெரியவந்தது.

    அஜித்குமார் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    பிரீத்தி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார்.

    அஜித்குமாரும், பிரீத்தியும் ஒருவரையொருவர் தீவிரமாக ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 2 பேரும் கடந்த 4ந்தேதி அன்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் 2 பேரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி உள்ளனர்.

    பின்னர் வாடகைக்கு வீடு தேடி அலைந்துள்ளனர்.

    உள்ளூர் நபர் ஒருவரிடம் வாடகைக்கு வீடு எடுத்து தருமாறு காதல் ஜோடி கேட்டுக்கொண்டபடி, அவர் முன்பணம் தேவை எனக் கூறி அஜித்திடமிருந்து 3 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு மாயமானார்.

    இந்நிலையில் கையில் இருந்த காசும் செலவானதால், வேறு என்ன செய்வது என தெரியாமல் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

    போலீசார் இவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ப்ரீத்தியின் பெற்றோர் இன்று மருத்துவமனைக்கு சென்றபோது காதலனுக்கு தெரியாமல் பெற்றோருடன் அங்கிருந்து மாயமானார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!