Viral News
தமிழகத்தை சேர்ந்த முகநூல் காதலனை மணக்க ஆந்திர பெண் செய்த அதிரடி செயல்; அதிர்ந்து போன போலீசார்…!
தமிழகத்தில் உள்ள முகநூல் காதலனை மணக்க ஆந்திராவில் இருந்து வந்த பெண் போலீசார் உதவியுடன் தனது காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21).
இவர் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவரை முகநூல் வழியாக பழகி காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் சுஜிதா தன்னுடைய காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடலூர் வந்துள்ளார்.
அவருக்கு தமிழ் தெரியாததால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது சுஜிதா நடந்த சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், சுஜிதாவின் காதலன் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் இருவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது சுஜிதா தன்னுடைய காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தனது சொந்த செலவில் சுஜிதாவிற்கு பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கிக்கொடுத்து வெங்கடேசுடன் திருமணம் செய்து வைத்தார்.
இதனால் காதல் தம்பதி மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
