Viral News
“சாவிய குடுங்க; வீட்டை பார்க்கணும்” -வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வீட்டின் சாவியை வாங்கி திறந்து உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி; திடீரென ஹவுஸ் ஓனர் வந்ததால் ஏற்பட்ட அதிரடி சம்பவம்..!
தெலங்கான மாநிலத்தில் வாடகைக்கு வீடு பார்க்க சென்று வீட்டின் சாவியை வாங்கி வீட்டை திறந்து உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடியின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் பி.கே.குடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீடு வாடகைக்கு என எழுதப்பட்டிருந்த பலகையை ஒரு காதல் ஜோடி பார்த்துள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளரிடம் சென்று தாங்கள் கணவன், மனைவி எனவும் வீட்டை வாடகைக்கு தர முடியுமா என்றும் கேட்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளரும் அதனை நம்பி சாவியைக் கொடுத்து காலியான அறையைச் பார்க்க கூறியுள்ளார்.
இரண்டாவது மாடியில் உள்ள காலி அறைக்கு சென்ற காதல் ஜோடி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அந்த இளம் ஜோடி வீட்டுக்குள் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த வீட்டின் உரிமையாளர் அவர்களிடம் ‘எனது வீட்டில் என்ன செய்கிறீர்கள்’ என கத்தியுள்ளார்.
உடனே அங்கிருந்து காதல் ஜோடி தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
உடனடியாக வீட்டின் உரிமையாளர் எஸ்ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
