Tamil News
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை துரத்தி துரத்தி கல்லால் அடித்து கொன்ற கயவன்; அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்…!
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் துரத்தி துரத்தி கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைவாசல் அடுத்த கூடமலை கிராமத்தில் வசித்து வரும் விவசாயி முருகேசன். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இரண்டாவது மகள் ரோஜா தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கடம்பூர் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்கிற வாலிபர் ரோஜாவை காதலிப்பதாக சொல்லி ரோஜா சென்ற கல்லூரி பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதனால் தன் பெற்றோரிடம் சென்று வருத்தப்பட்டிருக்கிறார் ரோஜா.
உடனே சாமி துரையை அழைத்து இனி எங்கள் பெண்ணுடன் பழகக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
ஆனாலும் அதன்பின்னரும் ரோஜாவின் பின்னால் சுற்றி வந்திருக்கிறார் சாமிதுரை.
ரோஜாவின் சகோதரி நந்தினிக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக உறவினர்கள் அனைவரும் வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் சாமிதுரை.
தன்னை காதலிக்க மறுத்ததால் தனக்கு கிடைக்காத ரோஜா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயற்சித்திருக்கிறார்.
உடனே ரோஜாவின் சகோதரி தண்ணீரை எடுத்து ஊற்றியதும் அதிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் ரோஜா.
அவர் தப்பித்து ஓடவும் பின்னாலேயே துரத்தி கொண்டு ஓடியிருக்கிறார் சாமிதுரை.
அப்போது கால்இடறி ரோஜா கீழே விழுந்திருக்கிறார், உடனே அருகில் கிடந்த கல்லை எடுத்து ரோஜாவின் தலையில் பலமாக அடித்திருக்கிறார் சாமிதுரை.
ஆறு முறை இப்படி ரோஜாவின் தலையில் பலமாக அடித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்திருக்கிறார் .
தகவலறிந்த போலீஸார் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பி ஓடிய குற்றவாளியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
