Connect with us

    “பிரக்ஞானந்தாவின் போராட்ட குணமும்; மன உறுதியும் என்னை வியப்படைய செய்கிறது” – உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு..!!

    Praggnanandhaa beaten Magnus Carlsen in chess

    Sports News

    “பிரக்ஞானந்தாவின் போராட்ட குணமும்; மன உறுதியும் என்னை வியப்படைய செய்கிறது” – உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு..!!

    உலக சாம்பியனும் கிரிப்டோ செஸ் சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், தன்னை 3 முறை வீழ்த்திய பிரக்ஞானந்தாவின் போராட்டக் குணம், மன உறுதி, தரமான ஆட்டத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

    Praggnanandhaa beaten Magnus Carlsen in chess

    அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டி தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்தார்.

    போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தா.

    இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் தொடரின் வெற்றியாளராக மேக்னஸ் கார்ல்சன் அறிவிக்கப்பட்டார்.

    பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    நடப்பாண்டில் 3வது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அன்று கிரிப்டோ செஸ் 7வது சுற்றில் பிரக்ஞானந்தா டைபிரேக்கருக்குள் செல்ல விடாமல் வென்றிருந்தால் சாம்பியன் ஆகியிருப்பார்,

    ஆனால் பிரக்னானந்தா பிரதான சுற்றை 2-2 என்று ட்ரா செய்தார், ஆனால் அந்த 2 வெற்றிகளுமே உலக சாம்பியனுக்கு எதிராக சாதாரண ஆட்டமல்ல.

    டைபிரேக்கருக்குச் சென்றதால் தன் சாம்பியன் பட்டம் உறுதியானதையடுத்து தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன் என்றார் கார்ல்சன்.

    மேலும், ட்விட்டரில் பிரக்ஞானந்தா பற்றி கார்ல்சன் பதிவிட்டிருப்பதாவது:

    “வெற்றி பெற முழு தகுதி பெற்றவர் பிரக்ஞானந்தா தான். மிகப்பெரிய அளவில் போராட்டக் குணத்தையும், மன உறுதியையும் தரமான செஸ் ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார் பிரக்ஞானந்தா.

    என்னைப் பொறுத்தவரை முதலிடத்தில் முடிந்ததே போதும் என்று இருந்தேன்” என்று கூறினார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!