Cinema
திருமணம் ஆகி முழுசா ஒருவாரம் கூட ஆகல; அதுக்குள்ள இப்படியா? சீரியல் நடிகை மகாலக்ஷ்மி எடுத்த அதிரடி முடிவு…. !!
சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இவர்களது திருமணம் திருப்பதியில் ரகசியமாக நடந்தேறியது.
இவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகிய நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை மகாலட்சுமி.
‘அரசி’ சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில், நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர்.
மகாலட்சுமிக்கு ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
அனிலிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
தற்போது இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இத்தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மகாலட்சுமியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
தென்னிந்திய சின்னத்திரையில் ரசிகர்களின் மனதைத் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமிழில் இதுவரை 5சீசன்கள் நிறைவடைந்துள்ளது.
அதன்படி ஆரவ், ரித்திகா, முகின், ஆரி, ராஜு ஆகியோரே 5 சீசன்களின் வெற்றியாளர்களாக தேர்வாகியிருக்கின்றனர்.
இதனை அடுத்த பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தேர்வாகினார்.
இதனை அடுத்து 6வது சீசன் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இது குறித்த புரோமோ ஒன்றும் அண்மையில் வெளியாகியிருந்தது.
அத்தோடு அண்மையில் 6வது சீசனிற்கான லோகோ வெளியாகி இருந்தது
நிகழ்ச்சி ஆரம்பமாக போகிறது என்றதில் இருந்து நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அப்படி அண்மையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை மகாலக்ஷ்மி பிக்பாஸ் 6வது சீசனில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் மகாலக்ஷ்மி நானும் போகமாட்டேன் இவரையும் போகவிடமாட்டேன் என உறுதியாக கூறி இருந்தார்.
இதில் எந்த மாற்றமும் ஏற்படுமா என தெரியவில்லை. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
