Connect with us

    “கொரோனா டெஸ்ட் அந்த இடத்தில் தான் எடுக்கணும்; திறந்து காட்டுங்க” – இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா டெஸ்ட் எடுத்த லேப் டெக்னீசியன்…!!

    lab technician takes vaginal swab in maharashtra

    Viral News

    “கொரோனா டெஸ்ட் அந்த இடத்தில் தான் எடுக்கணும்; திறந்து காட்டுங்க” – இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா டெஸ்ட் எடுத்த லேப் டெக்னீசியன்…!!

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவருக்கு கொரோனா டெஸ்ட் ( covid test ) எடுக்க பெண்ணுறுப்பில் ஸ்வாப் மாதிரி ( vaginal swab) எடுத்த வழக்கில் லேப் டெக்னீசியனுக்கு10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    lab technician takes vaginal swab in maharashtra

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.

    இதனால், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    அந்த வகையில் 23 வயது இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக சென்றுள்ளார்.

    அங்கிருந்த லேப் டெக்னீஷியன் முதலில் அப்பெண்ணுக்கு மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் கொரோனா மாதிரி எடுத்துள்ளார்.

    அதன்பின்னர் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள பிறப்புறுப்பில் மாதிரி எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

    முதலில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், வேறு யாராவது பெண் ஊழியர்கள் உள்ளார்களா என கேட்ட போது யாரும் இல்லை என அந்த லேப் டெக்னீசியன் கூறியுள்ளார்.

    மேலும், இந்த சோதனை மிகவும் அவசியம் என வலியுறுத்தியதால் அந்தப் பெண் வேறு வழியில்லாமல் மாதிரிகளை எடுக்க ஒத்துக் கொண்டுள்ளார்.

    இதனையடுத்து அந்தப் பெண்ணை தனி அறைக்கு கூட்டிச் சென்று பிறப்புறுப்பிலிருந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்த்துள்ளார் அந்த லேப் டெக்னீசியன்.

    அதில் கொரோனா நெகட்டிவ் என வந்ததாக கூறி அந்த பெண்ணை லேப் டெக்னீசியன் அனுப்பியுள்ளார்.

    வீட்டுக்கு சென்ற அந்த பெண் இது குறித்து தனது சகோதரரிடம் தெரிவித்ததையடுத்து தனக்கு தெரிந்த மருத்துவரிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

    உலகத்திலேயே அப்படி ஒரு சோதனை எதுவுமில்லை என்பதை மருத்துவர்கள் கூறியதை அடுத்து தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் லேப் டெக்னீசியன் மீது புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

    மருத்துவமனை ஊழியரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!