Tamil News
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வாலிபருடன் உல்லாசமாக இருந்த மனைவி; கணவர் செய்த வெறிச்செயல்; கதறிய குழந்தைகள்…!!
எவ்வளவோ கூறியும் கேட்காமல் வாலிபருடன் உல்லா சமாக இருந்த மனைவி; வாலிபரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (41). இவரது மனைவி பிரியா (35).
இவர்களுக்கு 14 மற்றும் 12 வ்யதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சசிகுமாரும், பிரியாவும் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கி இருந்து வேறு வேறு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.
பிரியா பணியாற்றி வந்த பனியன் நிறுவனத்தில் திருவாரூரை சேர்ந்த தமிழரசன் (30) என்பவர் பணியாற்றி வந்தார்.
இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரிய வந்ததையடுத்து மனைவி மற்றும் தமிழரசனை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு பிரியா இரவு நேர வேலைக்கு செல்வதாக சசிகுமாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இருப்பினும் சந்தேகமடைந்த சசிகுமார் மனைவி வேலைக்குத்தான் சென்றுள்ளாரா? என்பதை அறிய அவர் நேராக பனியன் நிறுவனத்திற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு பிரியா இல்லை.
இதையடுத்து தமிழரசன் வசித்து வரும் 15 வேலம்பாளையம் காளியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்று பா nmmnjர்த்தார்.
அப்போது அங்கு தமிழரசனும், பிரியாவும் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், தமிழரசனிடம் எனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு எத்தனை முறை கூறியுள்ளேன்.
அப்படி இருந்தும் ஏன் எனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தமிழரசனின் தலையில் போட்டார்.
இதில், தமிழரசன் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், சசிகுமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கொலை செய்யப்பட்ட தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
மனைவியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
